இந்தியாவின், தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் டாக்டர் ராஜேஷ் கண்ணன் (45). இவர், மனிதர்களின் பல் பராமரிப்பு மற்றும் பற்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


இதன் ஒரு அங்கமாக, கடந்த பெப்ரவரி மாதம் 35 அடி உயரத்திலான மிகப்பெரிய மாதிரி பல் ஒன்றை வடிவமைத்து, அதை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இவர், பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி, 68, 400 மனித பற்களை சேகரித்துள்ளார். இதன்மூலம், 'இந்தியா புக் ஒப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஆசியா புக் ஒப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் சாதனையாளராக பதியப்பட்டுள்ளார்.

இந்த சாதனைக்கான சான்றிதழையும், பதக்கத்தையும், 'ஆசியா புக் ஒப் ரெக்கார்ட்ஸ்' மதிப்பீட்டாளர் வைத்தியர் ஹரிஷ், டாக்டர் ராஜேஷ் கண்ணனுக்கு வழங்கினார். அத்துடன், வைத்தியரின் இந்த முயற்சி கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சாதனையாக இருந்த, 27 ஆயிரம் மனித பற்கள் சேகரிப்பை முறியடித்து, வைத்தியர்  ராஜேஷ் கண்ணன், 68, 400 மனித பற்களை சேகரித்து, சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.