(இராஜதுரை ஹஷhன்)

ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினருக்கு நியாயம் வழங்கப்பட்டு  அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியல் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புக்களை திருப்திப்படுத்தவும்  இராணுவத்தினரையும்,  புலனாய்வு பிரிவினரையும்  அரசாங்கம்  பழிவாங்கியது. யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினர்  சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்துவதற்கான  மார்க்கத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.பாதுகாப்பு அமைச்சின் இலக்கு தேசிய  பாதுகாப்பினை விடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டதை அடிப்படைவாதிகள் தமக்கு   சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  தமது இலக்கினை வெற்றிக் கொண்டார்கள்.

இன்று தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  இராணுவ  நுட்பமும், தேசிய பாதுகாப்பு  தொடர்பில் எவ்வித  அறிவும் இல்லாத அமைச்சரவையினை கொண்டுள்ள அரசாங்கத்தினால் மீண்டும் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முடியாது. இராணுவ நுட்பம் அறிந்த எம்மால் மாத்திரமே தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும்.

பெலியத்த நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.