வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த இளைஞர்கள் தாக்கியமையால் இரண்டு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பகுதியில் மது போதையில் நின்றிருந்த சிலர் அவ்வீதியால் பயணித்த இருவரை வழிமறித்து அவர்களுடன் முரண்பட்டதுடன் போத்தல் ஒன்றால் அவர்களை தாக்கியும் குத்தியுமுள்ளனர்.

இதனால் காயமடைந்த நிலையில் 30 மற்றும்24 வயதான இரு இளைஞர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூந்தோட்டம் சந்தியில் ஒன்று கூடும் சில இளைஞர்கள் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதும் சேட்டை புரிவதுமான செயற்பாடுகள் அண்மைகாலமாக  அதிகரித்து காணப்படுவதுடன், ஒவ்வொரு நாளும் இப்பகுதியில் அடிதடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக கிராம வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த செயற்பாட்டினால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், பொலிசார் இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனமெடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.