அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு!

Published By: Jayanthy

21 Oct, 2019 | 05:07 PM
image

சுமார்  8 ஆயிரம் வருடங்கள் பழமையான முத்து ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்தே உலகின் பழமையான முத்தென தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலுள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த முத்து மீட்கப்பட்டுள்ளது

இந்த தொல்பொருள் ஆய்வின் போது,கற்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பொக்கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

உலகின் பழமையான முத்து எனக் கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

குறிப்பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட முத்திறகு ‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டுள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் (பாரீசில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right