சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும்  பூசாரியாக வேடம் பூண்டு இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை ஹசலக்க பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று  இடம்பெற்றுள்ளது. அதில் 16 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாகத் தெரிய வருகின்றது. 

40 வயதுடைய மேற்படி சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்டசந்தேக நபரைக் கைது செய்த ஹசலக்க பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.