சுமார் 55 கலைஞர்களைக் கொண்டு, ஆர்ஜென்டீனா எல்லைப் பகுதியில் பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஆர்ஜன்டீனா - பராகுவே எல்லைப் பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட பிரமாண்ட சுவர் கட்டப்பட்டது.

இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் மக்கள்  மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும், லத்தீன் மற்றும் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக கட்டடக்கலை வல்லுநர்கள் உணர்ந்தனர்.

இதையடுத்து, புது யுக்தி ஒன்றை அவர்கள் கையாண்டனர். அதன்படி, சுவரின் ஒருபுறம், எல்லைப் பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில் ஓவியமாக வரையப்பட்டது.

சுவரின் மற்றொரு புறத்தில், அதே வரலாற்று நிகழ்வுகளை பென்சில் கொண்டு ஓவியமாக வரையப்பட்டது. இதில், பென்சில் கொண்டு வரையப்பட்ட பகுதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.  

இந்த ஓவியம், லத்தீன் மற்றும் அமெரிக்க நாடுகளான ஆர்ஜன்டீனா, பராகுவே, பெரு, பொலிவியா போன்றவைகளைச் சேர்ந்த 55 ஓவியக்கலை வல்லுநர்களால், 12 நாட்களில் வரையப்பட்டது.