(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 13 நாட்களுக்குள் 1,134 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24  மணித்தியாலத்திற்குள் 100 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவற்றுள் 95 முறைபாடுகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாகவும் , 5 முறைப்பாடுகள் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும்  முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 78 முறைபாடுகளும் மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 4 மணிவரையான 13 நாட்களுக்குள் ஆயிரத்து 134 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 691 முறைபாடுகளும் மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ,  தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக ஆயிரத்து 87 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் எட்டு முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.