162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா

Published By: Vishnu

21 Oct, 2019 | 02:51 PM
image

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். 

இந்தியா சார்பில் ரோகித் சர்மா 212 ஓட்டங்களையும், ரஹானே 115 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். 

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான எல்கர், ஓட்டம் எதுவும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் மொஹமட் ஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிகொக்  4 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தென்னாபிரிக்க அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

இந் நிலையில் மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 

ஹம்சா(62), பாவுமா(32) மற்றும் ஜார்ஜ் லின்டே(37) ஆகிய வீரர்களை தவிர பிற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதனால் தென்னாபிரிக்க அணி 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஷமி, ஜடேஜா, நதீம் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 

இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 335 ஓட்டங்களினால் பின் தங்கியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி ஃபாலோ ஆன் செய்து மீண்டும் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

அதன்படி சற்று முன்னர் வரை தென்னாபிரிக்க அணி  4 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. எல்கர் 16 ஓட்டத்துடனும், கிளேசன் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35