தரை­மட்­டத்­தி­லி­ருந்து 33,000 அடி உய­ரத்தில் பய­ணித்த  விமா­ன­மொன்றின் கதவை அந்த விமா­னத்தில் நிறை குடி­போ­தை­யி­லி­ருந்த   பய­ணி­ யொ­ருவர் திறக்க முயற்­சித்­ததால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.  

ரஷ்ய மொஸ்கோ நக­ரி­லி­ருந்து  தாய்­லாந்தின் புகெத் தீவிற்கு பய­ணித்த நோர்வைன்ட் விமா­ன­சே­வையின் போயிங் 777 விமா­னத்­தி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்த  பய­ணிகள் மற்றும் விமான ஊழி­யர்­களை உள்­ள­டக்கி 7 பேர் பெரும் போராட்­டத்தை மேற்­கொண்டு  சுமார் 30 வயது மதிக்­கத்­தக்க  அந்த நபரை மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்­தினர்.

இத­னை­ய­டுத்து அந்த விமானம் உஸ்­ பெ­கிஸ்­தா­னில் அவ­ச­ர­கால நிலைமையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டது.

தொடர்ந்து மது­போ­தையில் குழப்பம் விளை­வித்த நபர் பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டார். மீண்டும்  அந்த விமானம் புகெத் தீவுக்கு பய­ணத்தை  மேற்­கொண்டபோது அந்த விமா­னத் தில்  மது­போ­தையில் வாக்­கு­வா­தத் தில் ஈடு­பட்ட மேலும் இரு­வரை பிரித்து வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் விமான ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

மேற்படி விமானத்தில்  பயணிகளுக்கு மதுபானம் பரிமாறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.