(ஆர்.யசி)

முல்லைத்தீவு  நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்பின்  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட நால்வருக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

நீராவியடி பிள்ளையார் ஆலைய வளாகத்தில பெளத்த விகாரையில் தனியிருந்த  பௌத்த பிக்குவின் பூதவுடன்  நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட  அத்தே ஞானசார தேரருக்கும் முள்ளைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர்க்கு எதிராகவே  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு  இவ்வாறு  இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அர்ஷுண ஒபயசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இனத்போது  எதிராளிகளுக்கு அறிவித்தல் அனுப்பும்படி கட்டளை இடப்பட்டது. மனுவுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தனோடு ஆஜராகி வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட நீதியரசர்கள் நவம்பர் 8 ஆம் திகதி எதிராளிகளை நீதிமன்றில் பிரசன்னமாயிருக்குமாறு கட்டளையிட்டனர்