(தி.சோபிதன்)
தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பல வழிகளிலும் முன்னெடுத்து இன ரீதியான பிரச்சினைகளைத் தோற்றுவித்து ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கும் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியே இருந்தது. அந்தக் கட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற தமிழ்த் தலைமைகள் இதுவரை சாதித்தவை என்ன என்று வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வியெழுப்பியுள்ளார்.
யுத்தத்தை வழிநடத்தி வெற்றி பெற்றது தானே எனக் கூறிவருகின்ற சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க முடியுமென்றால் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு ஏன் வாக்களிக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.கே.கே.எஸ் வீதியின் சிவலிங்கப்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள பொதுஐன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வெற்றியைப் பெற்றுக்
கொடுக்கும் வகையில் வட மாகாணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதிலும் சரித்திரத்தில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகளும் முன்னர் ஆயுத இயங்கங்களாக இருந்த ஆயுதக் கட்சிகள் பலவும் தமது ஆதரவை கோத்தபாயவிற்கு தெரிவித்துள்ளன.
இவ்வாறு நாம் அனைவருமாக மக்களிடம் சென்று பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போது தமிழ்த் தலைமைகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் கடும் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஏனெனில் நம்பி வாக்களித்த கூட்டமைப்பு இன்றைக்கு தமக்காக எதனையும் செய்யவில்லை என்றும் அவர்கள் தமது பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவுமே அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் தொடர்பில் இன்னமும் தமது முடிவை கூட்டமைப்பு அறிவிக்கவில்லை. அவர்கள் தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் தாம் நம்பி ஏமாந்துவிட்டோம் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர்.
கவே கூட்டமைப்பும் சரி தமிழ் மக்களும் சரி சிந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவினூடாக எமது வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எமது வேட்பாளர் கோத்தபாய தனக்கு ஆதரவை வழங்குமாறு தமிழ் மக்களிடம் கோரியுள்ளார்.
கோபம் விரோதம் இல்லாமல் இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென சொல்லியிருக்கின்றார். அத்தோடு தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வை முன்வைப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
ஆகவே சிலரின் பதவிகளுக்காகவும் தமது சுயலாபங்களுக்காகவும் மக்களை ஏமாற்றுவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எண்ணியிருக்கின்ற எமது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கி எமது வேட்பாளர் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களுக்கே நன்மையாக அமையும். அதனை தமிழ் மக்களும் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் பேசப்படுகிறது. அவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதுமே காணப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளாலும் இயக்கங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களாலும் பலரும் காணாமல் போயிருக்கின்றனர். ஆகவே காணாமற்போனவர்கள் என்பது இன ரீதியான பிரச்சினை அல்ல. அது முழு நாட்டிலுமே உள்ள பொதுப் பிரச்சினையாகவே பார்க்கிறோம்.
ஆகவே தான் காணாமற்போனோர் விவகாரம். அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை பொதுப் பிரச்சினையாக அணுகி அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென மஹிந்த, கோத்தா, பசில் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். எனவே இவற்றுக்கான தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பம் இப்போது தமிழ்
மக்களுக்கு வந்திருப்பதால் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM