(இரா­ஜ­துரை ஹஷான்)

தேசிய பாது­காப்­பினை  பலப்­ப­டுத்தத்  தவ­றிய அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற நிர்­வா­கத்­தி­னாலேயே ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. தாக்­குதல்  நடத்­தப்­பட்டு 06 மாதம் நிறை­வ­டைந்தும் நீதி கிடைக்­க­வில்லை . பாதிக்­கப்­பட்ட மக்கள் நவம்பர் 16ஆம் திகதி எதிர்ப்­பினை தெரி­விக்க வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா தெரி­வித்தார்.

சுயா­தீன  விசா­ர­ணைகள்  நடத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட  பாரா­ளு­மன்ற தெரிவுக்குழு  பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு நற்­சான்­றிதழ் வழங்­கி­யுள்­ளது. இது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழைத்த அநீ­தி­யாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

நீர்­கொ­ழும்பில்  இடம்­பெற்ற ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­தில்  கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­டாறு குறிப்­பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் அர­சாங்­கத்தின்  பொறுப்­பற்ற நிர்­வா­கத்தின் வெளிப்­பா­டாகும்.

கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு ஐ.தே.க அர­சாங்கம் எத­னையும் செய்­ய­வில்லை. குண்­டுத்­தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக பாரா­ளு­மன்றில் குரல்­கொ­டுத்­துள்­ள­மை­யினால்  உயிர்த்த ஞாயிறுத் தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க பாராளு­மன்றத் தெரி­வுக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.    

ஆனால் அந்தத் தெரி­வுக்­கு­ழுவில் உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­த­லோடு தொடர்­பு­டைய பலர் உள்­ளார்கள். இத­னா­லேயே  தான் உயிர்த்த ஞாயிறுத் தாக்­குதல் தொடர்­பான தெரி­வுக்­கு­ழுவில் நாம் பங்­கு­பற்­ற­வில்லை எனவும் பயங்­க­ர­வா­தி­க­ளோடு தொடர்­பு­டைய பல­ருக்கு  நிர­ப­ரா­தி­க­ளெ­ன சான்­றிதழ் வழங்­கப்பட்டுள்ளது. அத்­து­டன்  பயங்­க­ர­வா­தி­களை காப்பாற்றிய மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி சஹ்ரானுடன் கலந்துரையாடிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரே ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கின்றனர் என்றார்.