களுத்துறை மாவட்ட அகலாவத்தை பகுதியில் ஒரு தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகலவத்தையின் கிரிவானகெட்டியவில் உள்ள வீடொன்றிலேயே இவர்களது சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய இருவரை ஏற்கனவே கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.