நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டைகளை பறிக்கொடுத்தவர்களின் தகவல்களை விரைவாக பெற்று தருமாறு, கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கவுள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை இன்றே ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.