(எம்.மனோசித்ரா)

2018 ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சி செய்து பின் வாசல் கதவால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் தற்போது முன் வாசல் வழியாக அதிகாரத்தை தருமாறு கோருகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த காலப்பகுதியில் இவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவில் வைத்திருக்கும் எவரும் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை உருவாக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று யடிநுவர - கடுகன்னாவ சுனில் எஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமக்கு இருக்கின்ற மிகக் குறுகிய காலத்திற்குள் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றக் கூடிய சிறந்த இளம் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்கு எவ்வித பேதமும் இன்றியும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.