(செ.தேன்மொழி)

வெயாங்கெடை - கும்புல்லொழுவ பகுதியில் இன்று அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கத்தி குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெயாங்கொடை கொட்டல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சசிக ரணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த மோதலின் போது காயமடைந்த மற்றைய நபர் வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவர் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.