கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெபெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156 ஆம் கட்டை பகுதியின் ஏ-9 வீதியிலேயே வேன் ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து சம்பவத்துள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த ஐவர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.