நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரைக்கும் 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.  

அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 506 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 995 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.