(செ.தேன்மொழி)

குருணாகல் மாவட்ட வாரியபொல பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரியபொல - பெலிகஹவத்த பகுதியில் நேற்று காலை சட்டத்தை நிலைநாட்டும் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பெலிகஹவத்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.