ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்காக 3 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் ஆடியிருப்பவர் குலாம் போடி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், அங்குள்ள உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகப் புகார் கூறப்பட்டது.  இதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 வருடம் தடை விதித்தது.

இந்த வழக்கு தென்னாபிரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.