டெஸ்ட் அரங்கில் முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்தார் ரோகித்

Published By: Vishnu

20 Oct, 2019 | 01:55 PM
image

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசியுள்ளார்.

இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி  இந்தியாவின் ராஞ்சியில் நடந்து வருகிறது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டியில், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 

பின்னர் ஆரம்ப ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் ரஹானே இணைந்தார். இருவரும் சரிவில் இருந்து, இந்திய அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ரோகித், அபாரமாக சதம் அடித்தார். 

இது அவரது 6 ஆவது டெஸ்ட் சதம். நடப்பு தொடரில் அவர் அடித்த 3 ஆவது சதம். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல், முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. 

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 224 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரோகித் 117 ஓட்டத்துடனும், ரஹானே 83 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே சதம் அடித்தார். 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் அவர் அடித்த சதம் இது. 

டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 11 ஆவது சதம்.

மறுமுனையில் ரோகித் சர்மா 150 ஓட்டங்களை கடந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரஹானே, 115 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித்தும் ரஹானேவும் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் சேர்த்தனர். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இரட்டை சதம் அடிக்க இருந்தார். எனினும் அதற்குள் உணவு இடைவேளை விடப்பட்டது.  அப்போது ரோகித் சர்மா 199 சேர்த்திருந்தார். 

பின்னர் ஆட்டம் தொடங்கியதும் நிகிடி வீசிய பந்தல் ஆறு ஓட்டத்தை பெற்று, ரோகித் இரட்டை சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்து உள்ளார் ரோகித். தற்போது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இரட்டை சதம் விளாசிய அடுத்த ஓவரிலேயே,  ரபாடா பந்தில் ஆறு ஓட்டம் விளாசும் முயற்சியில் நிகிடியிடம் கேட்ச் கொடுத்து மொத்தமாக 28 நான்கு ஒட்டங்களையும், 6 ஆறு ஓட்டங்களையும் விளாசி 212 ஓட்டத்துடன்  ஆட்டமிழந்தார். 

இதன் பின்னர் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 417 ஓட்டங்களை குவித்துள்ளது. ஜடேஜா 32 ஓட்டத்துடனும், அஷ்வின் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20