வடக்கு, கிழக்கில் தேசியக் கட்­சி­களின் எல்­லை­யற்ற பிர­சன்­னத்தால் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் இருப்பும் எதிர் ­கா­லமும் கேள்­விக்குள்ளாகும் போக்கு ஏற்­பட்­டுள்­ளது.  பரம்­பரை ரீதி­யான இடை­வெளி ஏற்­ப­டு­வதால் தமிழ்த் தேசியம் பற்றி உரை­யா­டலும் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் உள்­ளன.

அத­ன­டிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒன்­று­பட்டு அடுத்த கட்ட நகர்­வு­களை செய்­வ­தற்­கான தவிர்க்க முடி­யாத நிர்ப்­பந்தம் தற்­போது ஏற்­பட்­டுள்­ள­தாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் அர­ச­றி­வி­யல்­ து­றையின் தலைவர் கலா­நிதி.கே.ரி.கணே­ச­லிங்கம் வழங்­கிய செவ்­வி­யின் ­போது தெரி­வித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- தமிழ்த் தேசி­யப்­ ப­ரப்பில் உள்ள ஐந்து கட்­சி­களின் இணை­வையும் அவ்­இணைவு வெறு­மனே தேர்­த­லுக்­கா­னது மட்­டுமே என்று விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையும் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- 2002ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போதும்,  அதற்குப் பின்­ன­ரான காலத்தில் பல்­வேறு முரண்­பா­டுகள் ஏற்­பட்டு அவற்றின் அடிப்­ப­டையில் மாற்­றங்கள் நிகழ்ந்­த­தோடு வெளி­யேற்­றங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

2009இன் பின்னர் இந்த நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருந்த நிலையில் பத்து ஆண்­டு­க­ளுக்கு பின்னர் தற்­போது தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­க­ளி­டையே கூட்­டுத்­தேவை என்ற மன­நிலை கருத்­தியல் தளத்தில் இருந்­த­வர்­க­ளி­டத்­திலும், தமிழ் மக்­க­ளி­டத்­திலும் ஏற்­பட்­டது.

கூட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான பல முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு நடை­மு­றைச் ­சாத்­தி­ய­மற்ற சூழலில் தான், ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது. இத்­த­ரு­ணத்தில், தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பது மிகுந்த நன்­மை­யான விட­ய­மாகும். 

வெளி­யி­லி­ருந்து இந்த அர­சியல் கூட்டைப் பார்த்து விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­வர்கள் முக்­கிய விட­யத்­தினை கருத்­திற்­கொள்ள வேண்டும். இலங்கைத் தமி­ழரின் அர­சியல் வடி­வ­மா­னது அர­சியல் கட்­சி­களை சார்ந்­த­தா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. காரணம், முழு­நேர அர­சியல் செயற்­பா­டு­களை கட்­சி­களே முன்­னெ­டுக்­கின்­றன. தமி­ழர்­க­ளி­டத்தில் மக்கள் இயக்­கங்­களோ, தேசிய இயக்­கங்­களோ, ஆரோக்­கி­ய­மான சிவில் அமைப்­பு­களோ இல்லை. 

இவ்­வா­றான நிலை­மை­யா­னது, தனித்­து­வத்­தி­னையும் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் கொண்­டி­ருக்கும் தேசிய இனத்­தினை மோச­மான நிலை­மைக்கே இட்டுச் செல்­வ­தாக இருக்­கின்­றது. ஆகவே அத்­த­கைய நிலை­யி­லி­ருந்து தேசிய இன­மொன்றை மீட்­ப­தற்கு இவ்­வா­றான கூட்­டுக்கள் அவ­சி­ய­மா­கின்­றன. மேலும் தேர்­தல்­களே தமி­ழர்­களின் இருப்பு பற்­றிய அர­சியல் உரை­யா­டலை உரு­வாக்­கு­வ­தோடு அதனை அடிப்­ப­டை­யாக வைத்தே கூட்­டுக்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

கொள்கை ரீதி­யான கூட்­டுக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தென்றால், கொள்­கை ­ரீ­தி­யான தரப்­புக்கள் நடை­மு­றை­சார்ந்த தளத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு மறு­த­லிக்­கின்­றன. இலங்­கையில் இட­து­சா­ரித்­துவ கொள்கைக் கூட்­டுக்­களின் போக்­கினை அனு­பவ ரீதி­யாக நாம் கண்­டி­ருக்­கின்றோம்.

அதே­ நி­லைமை தான் தமி­ழர்­களின் கொள்கை கட்­ட­மைப்­புக்கும் ஏற்­ப­டு­கின்­றது. அந்­நி­லைமை கொள்­கையை நிரா­க­ரிப்­பது என்­றா­கி­வி­டாது. ஆனால் கொள்­கை­களை வளைத்­துக்­கொண்டு நடை­மு­றைச் ­சாத்­தி­ய­மாக செயற்­ப­டுதல் வேண்டும் என்ற விடயம் இங்கு பிர­தி­ப­லித்­துள்­ளது. 

கேள்வி:- தமிழ்த் தேசிய முன்­னணி பொது இணக்­கப்­பாட்டில் கையொப்­ப­மிட மறு­த­லித்­த­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்? 

பதில்:- அர­சி­யல் ­கட்­சிகள் தமக்­குள்ள நிய­தி­களின் பிர­காரம் தம்மை வெளிப்­ப­டுத்திக் கொள்­கின்­ற­மை­யா­னது பிழை­யான விட­ய­மொன்­றல்ல. அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தீர்­மானம் தவ­றென்று கூற­மு­டி­யாது. ஆனால் மக்கள் நலன்­சார்ந்து ஐக்­கி­யப்­படும் விட­யத்தில் விட்­டுக் ­கொடுத்தல் அவ­சி­ய­மான செயன்­மு­றை­யா­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க கோரி­யமை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டா­மைக்­காக கூட்டை புறக்­க­ணிக்க வேண்­டி­ய­தில்லை.  2ஆம் உலகப் போரின்­போது லெனின் ஹிட்­ல­ருடன் கூட்டை ஏற்­ப­டுத்­தினார். பாரிய விமர்­சனம் செய்­யப்­பட்­ட­போதும் ஜேர்­மனின் தோல்வி ரஷ்­யா­வுக்கு வெற்­றி­யாக முடிந்­தது.

சந்­தை ­வாய்ப்பு, வர்த்­தகம் உள்­ளிட்ட பொறி­ மு­றைகள் உள்ள தற்­கா­லச்­ சூ­ழலில் மாமல்­ல­பு­ரத்தில் இந்­தியப் பிர­த­மரும் சீனப்­பி­ர­த­மரும் சந்­திக்­கின்­றார்கள். இது­பற்­றிய புரிதல் இந்த உல­கத்­திடம் எவ்­வா­றுள்­ளது என்­பதே இங்­குள்ள முக்­கிய விட­ய­மாகும். 

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கொள்­கை ­ரீ­தி­யான முரண்­பா­டு­களை வெளிப்­ப­டுத்தி கடும் விமர்­ச­னங்­க­ளுடன் அதி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்த விக்­னேஸ்­வரன், சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தரப்­புகள் மீண்டும் ஒன்­று­பட்­டி­ருந்­தாலும் நடை­முறைச் சாத்­தி­ய­மான நகர்­வுகள் தொடரும் என்று நம்­பிக்கை கொள்­ள மு­டி­யுமா? 

பதில்:- இறு­தி­மு­டி­வு­களை எடுப்­ப­தற்­காக நடை­பெற்ற இரண்டு கூட்­டங்­க­ளிலும் நான் பங்­கேற்­றி­ருந்தேன். இதன்­போது அர­சியல் கட்­சி­களின் அனைத்து தலை­வர்­க­ளுக்கும், பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் தமிழர் சார்ந்து ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது.

விட்­டுக்­கொ­டுப்­புக்கள், தெளி­வு ­ப­டுத்­தல்கள், பரஸ்­பர உரை­யா­டல்கள், மகிழ்ச்­சி­யான தரு­ணங்கள், குரு-­ – சிஷ்ய உற­வுகள் கூட இதன்­போது காணப்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

மேலும், இந்த அர­சியல் கட்­சி­யி­னரை வெ வ்வேறு தூரத்தில் யாரோ கையா­ளு­கின்­றார்­களே தவிர ஒரே இடத்தில் அவர்கள் இருக்­கின்­ற­போது ஒரே மா­தி­ரி­யாக சிந்­திக்­கின்ற நிலைமை தான் அவர்­க­ளி­டத்தில் உள்­ளதை நான் கண்­டி­ருந்தேன். அத்­துடன் தமிழர் தாய­கத்தில் தேசியக் கட்­சி­களின் ஆதிக்கம் அதி­க­ரித்­தா­கி­விட்­டது.

இந்த அர­சி­யல் ­கட்­சி­களின் இருப்பும் எதிர்­கா­லமும் கேள்­விக்­கு­றி­யா­கின்ற நிலை­மையை நோக்­கிய போக்கும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், பரம்­பரை இடை­வெளி ஏற்­ப­டு­வதால் தமிழ்த் தேசியம் பற்றி உரை­யா­டலும் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கட்­சிகள் ஒன்­று­பட்டு அடுத்த கட்ட நகர்­வு­களை செய்­வ­தற்­கான தவிர்க்க முடி­யாத நிர்ப்­பந்­தத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  

கேள்வி:- தமிழ்த் தரப்பின் நிபந்­த­னைகள் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களால் ஏற்­ப­டாது போனால் அடுத்­த­கட்டம் என்ன?

பதில்:- தமி­ழர்கள் முன்­வைத்­துள்ள நியா­ய­மான விட­யங்­களை அவர்கள் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான சூழல் இருக்­குமா என்­பது எம்­முன்­னுள்ள கேள்­வி­யா­கின்­றது. அவ்­வாறு சாத்­தி­ய­மற்ற நிலை ஏற்­ப­டு­கின்­ற­போது, முத­லா­வ­தாக தேர்­தலை முழுமை­யாக பகிஷ்­க­ரிப்­பது பற்றி சிந்­திக்­கலாம். பகிஷ்­க­ரிக்­கின்ற முடி­வினை எடுக்­கின்­ற­போது தமிழர் 

தாய­கத்தில் முழு­மை­யாக அதனை மேற்­கொள்ள முடி­யுமா என்ற கேள்­வி­யுள்­ளது. இரண்­டா­வ­தாக பொது­வேட்­பாளர் ஒருவரை நிறுத்­த­மு­டி­யாது போயுள்ள நிலையில் தேர்தல் களத்தில் உள்ள சிவா­ஜி­லிங்­கத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­து­வது பற்றி கவனம் செலுத்­தினோம். 

மூன்­றா­வ­தாக தமிழ் மக்கள் சுயா­தீ­ன­மாக தமது ஜன­நா­யக கட­மையை முன்­னெ­டுப்­ப­தற்கும் விடு­வ­து­பற்­றியும் ஆராய்ந்­துள்ளோம். இருப்­பினும் அர­சியல் கட்­சி­யா­னது தான் சார்ந்­தி­ருக்கும் மக்­க­ளுக்கு நிலைப்­பாட்­டினை கூற­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை அர­சியல் தரப்­பினர் முன்­வைத்­தார்கள்.

இந்­நி­லையில், வேட்­பா­ளர்­க­ளுக்கும் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பின் பின்னர் மீண்டும்  கூடி ஆராய்ந்து தீர்­மானம் எடுப்­ப­தென்று முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்கு எடுத்த முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­கா­மைக்­கான கார­ண­மென்ன? இந்த முயற்சி வெற்­றி­ய­ளித்­தி­ருந்தால் பௌத்த சிங்­கள மேலா­திக்­கத்­திற்கு மேலும் வலு சேர்ப்­ப­தாக இருந்­தி­ருக்­கு­மல்­லவா?

பதில்:- தென்­னி­லங்­கையில் பௌத்த சிங்­கள மேலா­திக்க சிந்­தனை வடக்கின் நிலை­மை­களை மையப்­ப­டுத்­தியே எழும் என்­பது இரண்­டா­வது பட்­ச­மான பார்­வை­யாகும். ஆரம்­பத்­தி­லி­ருந்து தென்­னி­லங்­கையின் சிந்­தனைப் போக்கில் மாற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை.

அவ்வாறிருக்க, தமிழ்த்தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தும் விடயத்தினை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தபோதும் அதற்கான கால அவகாசம் சம்பந்தமாகவே அதிக கரிசனை கொண்டிருந்தார்கள். மு.திருநாவுக்கரசு 2010இலிருந்து இதுபற்றிய கருத்தாடல்களை ஆரம்பித்திருந்தார். 2015இலும் இந்த விடயத்தினை அவர் முதன் மைபடுத்தியிருக்கின்றார்.

எனவே முழுநேர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இவ்விடயத்தினை கையிலெடுத்து செயற்படுவார்கள் என்று காத்திருந்து ஈற்றில் அதனை சிவில் தரப்பினைச்சேர்ந்த சுயாதீனக்குழுவினர் கையிலெடுத்தார்கள்.

மேலும், தமிழர்கள் தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலை உணர்ந்துள்ளதோடு தாம் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கின்றார்கள் என்பதை புவிசார் அரசியல் தளத்தில் இலங்கைத்தீவினை பயன்படுத்துகின்ற, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு தெளிவூட்டலை செய்வதற்கான உத்தியாகவும் இந்த விடயத்தினைக் கருதினோம். 

நேர்காணல்கள் : ஆர்.ராம்