எதிர்­கா­லத்தில் உணவு உண்­பதா? சூட்­டுக்கு இலக்­கா­வதா?: தீர்­மானம் மக்­களின் கைகளில் என்­கிறார் பிர­தமர்

Published By: J.G.Stephan

20 Oct, 2019 | 01:36 PM
image

நா.தனுஜா

கோத்­தா­பய ராஜ­பக் ஷ புதிய நாடொன்றைக் கட்­டி­யெ­ழுப்பப் போவ­தாகக் கூறு­கின்றார்.  யார் புதிய நாட்டை உரு­வாக்­கு­வது? கடந்த பத்­து­வ­ருட காலம் அவர்­களே ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருந்­தனர்.இப்­போது கூறு­ப­வற்றை அப்­போது செய்­தி­ருக்­கலாம்.  இம்­முறை தேர்­தலில் எதி­ரணி வெற்­றி­ய­டைந்தால் கோத்­தா­பய ராஜ­பக் ஷ, மஹிந்த ராஜ­ பக் ஷ, பசில் ராஜ­பக் ஷ,  நாமல் ராஜ­பக்  ஷ ஆகி­யோரே நாட்டை ஆள்வர்.

இங்கு என்ன மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது? எனவே எதிர்­கா­லத்தில் உணவு உண்­பதா? அல்­லது துப்­பாக்கிப் பிர­யோ­கத்­திற்கு இலக்­கா­வதா? என்ற தீர்­மா­னத்தை நாட்­டு­மக்கள் எதிர்­வரும் நவம்பர் 16 ஆம் திகதி  மேற்­கொள்ள வேண்டும்.  உண­வுண்­ப­தெனின் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்­யுங்கள் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யினால் நேற்று சனிக்­கி­ழமை லக்­கல நகரில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:

இப்­போது எம்­மத்­தியில் எஞ்­சி­யி­ருக்கும் ஒரே­யொரு பொறுப்பு எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்னம் சின்­னத்­திற்கு வாக்­க­ளித்து சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­வது ஒன்­றே­யாகும். கடந்த காலங்­களில் லக்­கல என்­பது மிகவும் பின்­தங்­கிய பிர­தே­ச­மா­கவே காணப்­பட்­டது. எனினும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த விஜ­ய­ரத்ன பண்டா இங்கு அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­தினார்.  அதன்­பின்னர் மீண்டும் எல்­லோ­ருக்கும் லக்­கல மறந்­து­போய்­விட்­டது.  எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் மீண்டும் ஆட்­சி­ய­மைத்த பின்னர் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் இங்கு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது அனை­வ­ருக்கும் தெரியும்.

கம்­பெ­ர­லிய வேலைத்­திட்­டத்தின் ஊடாக   வீதிகள் அனைத்தும் புன­ர­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை திட்­டத்தின் கீழ் பெரும் எண்­ணிக்­கையில் பாட­சா­லைகள் அமைக்­கப்­பட்டும், வச­திகள் மேம்­ப­டுத்­தப்­பட்டும் இருக்­கின்­றன. 

சமுர்த்தி கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.மாபொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான சுரக்க்ஷா காப்­பு­றுதித் திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.  மேலும் நாட்டில் வாழும் பல்­வேறு பிரி­வி­ன­ரையும் கருத்­திற்­கொண்டு பல்­வேறு செயற்­திட்­டங்கள்  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.  அதே­போன்று லக்­கல பிர­தே­சத்தில் 5000 ஏக்கர் இறப்பர் பயிர்ச்­செய்­கையை ஆரம்­பிப்­ப­தற்கும் திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம்.  

பலா­லியின் யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தை  திறந்து  வைத்­தி­ருக்­கிறோம்.   அடுத்­த­தாக மட்­டக்­க­ளப்பு விமான  நிலை­யத்­தையும் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய­மாக மாற்­றுவோம்.  இப்­பி­ர­தே­சத்­திற்கு சுனாமி முன்­னறி   கரு­வியைப் பெற்­றுக்­கொ­டுப்போம். அது வேண்­டு­மெனில் வர­வி­ருக்கும் பெரிய பூதத்தைத் தோற்­க­டிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம்.

 ராஜ­ப­க்ஷாக்கள் எப்­போதும் ராஜ­ப­க்ஷாக்­களே.   அவர்கள் ஆட்­சி­யி­லி­ருந்த போது மெத­மு­லா­னவை அபி­வி­ருத்தி செய்­ததை போன்று ஏனைய பின்­தங்­கிய பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை. அப்­போது பொருட்­களின் விலை­க­ளையும் குறைக்­க­வில்லை.  குடிநீர் கோரி ரது­பஸ்­வெ­லவில்  போரா­டி­ய­வர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தி­னார்கள்.  எனினும் 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்தபின்னர் நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தோம். அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

எனவே எதிர்காலத்தில் உணவு உண்பதா? அல்லது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காவதா? என்ற தீர்மானத்தை நாட்டுமக்கள் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி  மேற்கொள்ள வேண்டும்.  உணவுண்பதெனின் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33