2 ஆவது தடவையாக இந்தியாவில் J.D. Power விருதை வென்ற Ford EcoSport 

Published By: Priyatharshan

23 May, 2016 | 11:57 AM
image

J.D. Power and Associates நிறுவனத்தால் இந்திய ஆரம்ப தர ஆய்வு (IQS) ஒன்றில் உயர் ஸ்தானத்திலுள்ள SUV வாகனமாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டு, Ford EcoSport, மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது.

EcoSport தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த விருதை சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆய்வை J.D. Power and Associates மேற்கொண்டு வருகின்றது.

வியாபார நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பான முன்னெடுப்புக்களை அமுல் செய்வதில் அறிவுபூர்வமான தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த ஆய்வுகள் நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றன.

முற்றிலும் சுயாதீனமான நடைமுறையின் கீழ்,  J.D. Power and Associates இன் நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுவதுடன் இதன் பெறுபேறுகள் பல்வேறுபட்ட வாகன உரிமையாளர்களின் கருத்துக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை.

“தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் J.D. Power IQS விருதை வென்றுள்ளமை, எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளை வழங்க வேண்டும் என்ற எமது ஈடுபாட்டை மீளவும் வலியுறுத்துகின்றது” என்று Ford India நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் விற்பனைகள் மற்றும் பேணற் சேவைகளுக்கான பணிப்பாளரான அனுராக் மெஹ்ரொட்ரா குறிப்பிட்டார்.

2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட EcoSport, அதன் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் பெறுமதி திட்டம் ஆகியவற்றுடன் இந்தியாவில் அதி விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற கச்சிதமான பயன்பாட்டு வாகனப் பிரிவில் தனி முத்திரையைப் பதித்துள்ளது. 

மோட்டார் வாகனம் ஒன்றின் உணர்வு மற்றும் இயக்கவியல் ஆகியவற்றுடன், SUV வாகனம் ஒன்றை ஒத்த அதன் கனமான தோற்றம் மற்றும் பன்முக திறன்களின் இணைப்பை வழங்குகின்றது. Ford EcoSport இந்தியாவில் Ford உற்பத்தியால் முன்னிலைப்படுத்தப்பட்ட மாற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58