தொடர் மழை காரணமாக ராஜாங்கணை, தெதுரு ஓயா மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் வினாடிக்கு 6,100 கன அடி நீரை கலா ஓயாவுக்கு வெளியேற்ற முடியும்.

இதவேளை அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகள் தலா இரண்டு அடி திறக்கப்பட்டுள்ளன.

இந்த வான் கதவுகள் மூலம் வினாடிக்கு 5,500 கன அடி நீரை வெளியேற்ற முடியும்.