கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த ஹிஸ்­புல்லாஹ், தனக்கு தேசி­யப்­பட்­டியல் கிடைத்­தபின் குண்­டர்­களை வைத்து எங்­க­ளது கட்சி ஆத­ர­வா­ளர்­களை தாக்­கினார். அதனை பார்­வை­யிடச் சென்ற இட­மொன்றில் பயங்­க­ர­வாதி சஹ்­ரானும் இருந்­தி­ருக்­கிறான்.

அந்த பழைய காணொ­ளியை வைத்து சிலர் அர­சியல் ஆதாயம் தேடு­வ­தற்கு முற்­பட்­டுள்­ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ கலந்­து­கொண்ட தேர்தல் பிர­சாரக் கூட்­டம்­நேற்று (19) கண்டி, கல­கெ­தர தேர்தல் தொகு­தியில் ஹத்­த­ர­லி­யத்­தவில் நடை­பெற்­ற­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.அங்கு தொடர்ந்து உரை­நி­கழ்த்­திய அவர் மேலும் கூறி­ய­தா­வது;

சில சிங்­கள மொழி இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களில் என்­னையும் தீவி­ர­வாதி ஸஹ­ரா­னையும் தொடர்­பு­ப­டுத்தி பழைய காணொ­ளி­யொன்றை ஒளி­ப­ரப்பி, பொது மக்கள் மத்­தியில் தவ­றான மனப்­ப­திவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விஷ­மத்­த­ன­மான செய்­தி­யொன்று பரப்­பப்­பட்­டது.

2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தரப்பில் போட்­டிட்ட ஹிஸ்­புல்லாஹ் படு­தோல்­வி­ய­டைந்தார். அதன்பின், பின் கதவால் சென்ற ஹிஸ்­புல்லாஹ், அவர் எதிர்த்துப் போட்­டி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மி­ருந்து தேசி­யப்­பட்­டியல் ஆச­ன­மொன்றை பெற்­றுக்­கொண்டார்.

அதன்பின், உட­ன­டி­யாக குண்­டர்­களை கொண்டு அவ­ரது அர­சியல் எதி­ரி­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்­களை தாக்­கினார். அத்­துடன் அவர்­க­ளது வீடு­க­ளுக்கும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பார­தூ­ர­மான சேதங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தினார். தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி, பொலிஸார் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வி­டாமல் தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் வேண்­டு­கோ­ளை­ய­டுத்து, ஹிஸ்­புல்­லாஹ்வின் அடா­வ­டித்­த­னத்­தினால் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களை வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று நேரில் பார்­வை­யிட்டேன். நிலை­மை­களை நேரில் கண்­ட­றிய கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் சேதம் விளை­விக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கும் சென்றேன்.

அப்­ப­டிச்­சென்ற இட­மொன்றில் ஏனை­ய­வர்­க­ளுடன் ஒரு­வ­ராக பயங்­க­ர­வாதி ஸஹ்­ரானும் இருந்­தி­ருக்­கிறான். அப்­போது அவ­னைப்­பற்றி எனக்கு தெரிந்­தி­ருக்­க­வில்லை.

இந்த செய்தி ஊட­கங்­க­ளிலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் வெளி­வந்து சில வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், ஜனா­தி­பதி தேர்தல் இப்­போது அதை தூக்­கிப்­பி­டிக்­கின்­றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­பதால், சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வாத பிர­சா­ரத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்தக் கதையை மக்கள் மத்­தியில் பரப்­பு­கின்­றனர் என்றார்.