உலகிலேயே முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த விமானச் சேவை இன்று சனிக்கிழமை  முதல் செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக இந்த விமானச் சேவையில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குத் தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாகப் பயணிக்கவுள்ளன.
அந்தவகையில் நேற்று இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்துறையில் புதிய வரலாற்றைப் படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்குத் தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகளின் அனுபவத்தைத் தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது