பொகவந்தலாவை - செப்பல்ட்டன் தோட்ட பகுதியில் 19 தொழிலாளர்கள்  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்தோடு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 16 பேர் பெண் தொழிலாளர்கள் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களை பொகவந்தலாவ வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.