வட்டக்கொட வடக்கு மடக்கும்பர தோட்ட வைத்தியசாலையில் காலாவதியான மருந்து பொருட்களை எறித்தமையினால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வைத்தியாசாலையின் வளாகத்தில் மருந்து பொருட்களை எறிந்தமையினால் ஊர்ழுமுவதிலும் துர்நாற்றம் பரவியுள்ளது.

மேலும் குறித்த வைத்தியாசாலைக்கு அருகில் தொழில் புரிந்த தோட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்ததோடு சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர். 

இதனால பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 

எனவே இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடின் போராட்டத்தை கையிலெடுப்பதாக வடக்கு மடக்கும்பர தோட்ட மக்கள் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.