இளம் பெண்ணின் வைபருக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதயவர் கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்தவர் எனவும் யுவதியின் தந்தையின் நண்பரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குச் சென்ற வேளையில் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட அவர் பின்னர் 'ஐ லவ் யூ " என தகவலும், முத்தயிடலைக் காட்டும் ஸ்டிக்கரொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், குறித்த யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அந் முதயவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.