‘தல’ அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 

‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு ‘தல’ அஜித் நடிக்கும் அறுபதாவது படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.இந்த படத்தின் ஆரம்ப விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்திற்கு “வலிமை” என பெயரிடப்பட்டிருக்கிறது.

டைட்டில் டிசைன் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தல அஜித் புலனாய்வு அதிகாரியாகவும், கார் பந்தய வீரராகவும் நடிக்கிறார் என்றும், படத்தின் படபிடிப்பு சென்னை, டில்லி மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். 

இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம்எழுதி இயக்குகிறார் ஹெச். வினோத். 

தல அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வலிமை’ என அறிவித்தவுடன், அவரது ரசிகர்கள் இதனை இணையத்தில் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறார்கள்.