சீரற்ற காலநிலை காரணமாக சீருடைகளை பறிகொடுத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.