ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை மதிய தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 62 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்ஹர்கர் பிராந்தியத்தில் உள்ள மசூதியொன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

பாரிய சத்தம் கேட்டது அதன் பின்னர் மசூதியின் கூரை இடிந்து விழுந்தது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனதை மிகவும் வேதனைப்படுத்தும் சம்பவம் இடம்பெற்றது அதனை நான் என் கண்களால் பார்த்தேன் என பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியில் முல்லா ஒருவர் போதனை செய்துகொண்டிருந்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தவேளை திடீரென பாரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது திடீரென அவரது குரல் மௌனமாகியது என காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.நான் அந்த இடத்திற்கு சென்றவேளை மக்கள் உடல்களை வெளியே கொண்டுவருவதற்கு முயன்றுகொண்டிருந்தனர் என தெரிவித்துள்ள அவர் கூரை விழுந்ததால் பலர் அதன்கீழ் சிக்குண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.