(இராஜதுரை ஹஷான்)

இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் பெரும்பான்மை ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு என்று அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும்,  இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தினருக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும், நாடு தழுவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பேச்சுவார்த்தையின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள சங்கத்தினர் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கும்,  அரச போக்குவரத்து சேவையினரது பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முழுமையாக செயற்படுத்துவதாகவும் பொதுஜன பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ இதன் போது  வாக்குறுதி வழங்கியுள்ளார்.