யார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும் 

Published By: Vishnu

18 Oct, 2019 | 07:01 PM
image

(நெவில் அன்தனி)

யார் அணித் தலைவரானாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சிறந்த அணியைத் தயார் செய்ய வேண்டியது அவசியம் என இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ள இலங்கை அணியானது எதிர்வரும் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளது.

இத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியினை நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந் நிலையில் இத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி வீரர்கள் இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சமய வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே லசித் மாலிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இருபது - 20 அணிக்கு ஒரு புதிய தலைவரை, புதிய அணியைத் தெரிவு செய்தமை நாங்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றி. அத்துடன் நான் பங்குபற்றாததாலேயே புதிய தலைவர் ஒருவர் தெரிவானார். நான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டேன். 

இப்போது இருபதுக்கு - 20 இல் விளையாடும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சொற்ப காலமே எஞ்சியிருக்கின்றது. இதனால்தான் நான் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றபோது யார் அணித் தலைமையை ஏற்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் நான் இடம்பெறாததால் தான் புதிய தலைவர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது என சமூக வலைத் தளங்களில் கூறப்பட்டது. அது மிகவும் நல்ல விடயம். எனவே நான் பங்குபற்றாதது ஒருவகையில் நல்லது என்று கருதுவதுடன் திருப்தியும் அடைகின்றேன். 

அந்த கிரிக்கெட் விஜயத்தில் (பாகிஸ்தான்) தசூன் சானக்க சிறப்பாக செயற்பட்டார். அத்துடன் கசுன் ராஜித்த, நுவன் பிரதீப், லஹிரு குமார ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நான் விளையாடாதது குறித்து திருப்தி அடைகின்றேன் என்றார்.

அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் விஜயத்துக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்கள் குறித்து திருப்தி அடைகின்றீர்களா என மாலிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்ட பதிலளித்த அவர், 

நிச்சயமாக. ஏனேனில் உலகில் (இருபது - 20) முதல் நிலை அணியை வெற்றிகொண்ட அணியில் இடம்பெற்ற வீரர்களே அவுஸ்திரேலியா செல்லும் அணியில் இடம்பெறுகின்றனர். அவர்கள் அடங்கிய அணியில் நானும் இணைவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன் நியூஸிலாந்து கிரிக்கெட் விஜயத்தில் பிரகாசித்த குசல் ஜனித் பெரேரா, திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியொருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படிப் பார்க்கும்போது அதிசிறந்த இருபது 20 கிரிக்கெட் வீரர்களே இந்த சுற்றுப்பயணத்தல் இடம்பெறுகின்றனர் என்றார்.

பாகிஸ்தானில் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி வெற்றிகொண்டதால் தங்களது ஓய்வு அண்மிக்கின்றதாகக் கருதுகின்றீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட பதிலளித்த அவர், 

ஓய்வு பெறுவது என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் எப்போதும் எனக்கு விருப்பமான நேரத்தில்தான் ஓய்வுபெற்றேன். நான் ஒரு விடயத்தை இங்கு கூறவிரும்புகின்றேன். இளம் வீரர்கள் பிரகாசிக்கும்போது லசித் மாலிங்க ஓய்வு பெறாமிலிருப்பது பெரிய பிரச்சினையாக இருக்கலாம். இளம் வீரர்களை எடுத்துக்கொண்டால் தசூன் சானக்க, செஹான் ஜயசூரிய போன்றவர்கள் 2013 இல் இருபது 20 கிரிக்கெட்டின் மூலமெ அறிமுகமானார்கள். இந்தத் தீர்மானத்தை நான் அப்போது எடுத்தபோது அனைவரும் என்னை விமர்ச்சித்தனர். 

எனது தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக சில விரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். இது ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த விடயம். இப்போது ஆறு வருடங்கள் கடந்த நிலையில் லசித் மாலிங்கவை விட இளம் வீரர்களே சிறந்தவர்கள் என நீங்கள் தீர்மானித்துள்ளீர்கள். 

நீங்கள் இன்று உணர்வதை நான் ஆறு வருடங்களுக்கு முன்னரே உணர்ந்துவிட்டேன் என்பது குறித்து அணித் தலைவர் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றாவது நீங்கள் அதனை உணர்ந்ததையிடடு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

அவுஸ்திரேலியாவுக்கு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 21 ஆம் திகதி இங்கிருந்து புறப்படுகின்றது.

முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் அக்டோபர் 27ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ப்றிஸ்பேன் கபா விளையாட்டரங்கில அக்டோபர் 30 ஆம் திகதியும் கடைசிப் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நவம்பர் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளன.

இலங்கை குழாம் 

லசித் மாலிங்க (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், பானுக்க ராஜப்க்ஷ, ஓஷாத பெர்னாண்ன்டோ, தசுன் ஷானக்க, வனிந்து ஷசரங்க டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, செஹான் ஜயசூரிய, இசுறு உதான, நுவன் ப்ரதீப், லஹிரு குமார, கசுன் ரஜித்த, லக்ஷான் சந்தகேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35