தம்புள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ள பொலிசார் தெரிவித்தனர்.

கலேவெல  பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பன்னம்பிட்டிய நோக்கி மோட்டார் சைக்கிளில்  பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் தம்புள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.