ஜெய­ல­லி­தாவின் வெற்றி இலங்­கைக்கு ஆபத்­தா­னது என எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமி­ழர்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரி­மையைப் பெற்­றுக்­கொ­டுத்து தனித்­த­மி­ழீ­ழத்தை பெற் றுக் கொடுக்கும் "இந்­தி­யாவின்" தலை­யீடு இலங்­கைக்குள் அதி­க­ரிக்கும் என்றும் அவ்­வி­யக்கம் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்தபண்­டார மேலும் தெரி­விக்­கையில், தமிழ்நாட்டில் அதிகப் பெரும்­பான்­மை­யுடன் வெற்றிபெற்று ஜெய­ல­லிதா மீண்டும் தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­ச­ரா­கி­யுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏனைய கட்­சிகள் பல­மி­ழந்து ஜெய­ல­லி­தாவின் பலம் ஓங்­கி­யுள்­ளது. இது இலங்­கைக்கு ஆபத்­தா­ன­தா­கவே அமையும். ஏனென்றால் ஜெய­ல­லி­தாவின் தேர்தல் அறிக்கை வெற்றி பெற்றால் இலங்­கையின் வட­ப­குதி தமி­ழர்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரி­மையை பெற்­றுக்­கொ­டுப்பேன்.

கச்­ச­தீவை மீட்பேன் என்­றெல்லாம் உறு­தி­மொழி வழங்­கினார். இந்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற பின்னர் ஜெய­ல­லிதா அனைத்து முயற்­சி­க­ளையும் எடுப்பார்.

இதன்­போது இந்­தி­யப்­ பி­ர­தமர் மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதி­கப்­பெ­ரும்­பான்மை பெற்ற தமிழ்நாட்டு முத­ல­மைச்­சரை பகைத்துக் கொள்­வதை மோடி விரும்­ப­மாட்டார்.

எனவே இந்­தி­யாவின் மத்­திய அரசின் ஆத­ர­வுடன் ஜெய­ல­லிதா இலங்­கையில் வட­ப­குதி தமி­ழர்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரி­மையை பெற்­றுக்­கொ­டுக்கும் திட்­டங்­களை முன்­ன­கர்த்­துவார்.

சுய­நிர்­ணய உரிமை கிடைத்த பின்பு தனித்­த­மி­ழீழம் என்­பது தானா­கவே உரு­வெ­டுக்கும். அதனை தடுக்க முடி­யாது. அதே­போன்று சட்டரீதி­யாக இலங்­கைக்கு சொந்­த­மான கச்­ச­தீவும் பறி­போகும் ஆபத்தும் உள்­ளது. கடந்த காலங்களை விட இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் அதிகரிக்கும். எனவே ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித் தார்.