அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரஜையொருவர் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டில் இடம்பெற்ற 17 ஆவது அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் போட்டியில் கலந்துகொண்ட அவர் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதியான ருவான் போல் என்பவர் ஆவார். இவர் 220 கிலாகிராம் எடைப் பிரிவின் பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியன் மாஸ்ரஸ் தொடராது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இம்முறை நடைபெற்று முடிந்த 17 ஆவது தொடரில் சுமார் 8000 போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.