(ஆர்.விதுஷா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ஷவிடம்  நாட்டின் பொருளாதாரத்தை முகாமை  செய்யக்கூடிய தகுதியும் திறமையும் இல்லை  என்று கூறியிருக்கும் பெருநகர ,மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தேர்தல் பிரச்சாரத்தின்  போது அவர்  வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதியை எங்கிருந்து  திரட்டப்போகிறார்  என  நாட்டு மக்களுக்கு விளக்க  வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

கோத்தாபய  ராஜபக்ஷ  பொலநறுவைக்கு  சென்றிருந்த  போது  இலவசமாக உர மானியத்தை வழங்குவதாகவும்,தேயிலை  உரிமையாளர்களை  சந்தித்த போது வரிவீதங்களை  குறைப்பதாகவும் சில வரிகளை  முற்று  முழுதாக  நீக்குவதாகவும்  கூறியிருக்கின்றார்.

இதுகுறித்து  கருத்து தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க  தனது உத்தியோக பூர்வ முகநூலிலேயே  மேற்கண்டவாறு  பதிவேற்றம்  செய்திருக்கின்றார்.  

அவர் அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது,

ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய  ராஜபக்ஷ தான் எதனை  கூறுகின்றார் என்ற தெளிவு அற்ற  நிலையில் மக்களுக்கு பொய்யான  வாக்குறுதிகளை அளித்து வருகின்றார் என அவர் இதன்போது தெரிவித்தார்.