கல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்

By Daya

18 Oct, 2019 | 04:51 PM
image

இந்தியாவிலுள்ள கல்கி ஆச்சிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டொலர்கள் உட்பட இந்திய ரூபா மதிப்பில் 93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற கல்கி ஆச்சிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் அமைந்துள்ளது.

இதேவேளை, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆச்சிரமத்தின் கிளைகள் உள்ளன.

கல்கி ஆச்சிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே கல்கி பகவான் விஜயகுமார், பக்தர்களுக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்ததாகவும், சிறப்புப் பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதையடுத்து ஆந்திரா, சென்னை உட்பட நாடு முழுவதும் அந்த ஆச்சிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனையை முன்னெடுத்தனர்.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்தியப் பணம் ரூபா 43.9 கோடி, ரூபா 18 கோடி மதிப்பிலான அமெரிக்க டொலர்கள், ரூபா 26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூபா 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 93 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21