ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 11 பேரில் 2 பிரதேச சபை உறுப்பினர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 851 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.