(எஸ்.ஜே.பிரசாத்)
45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வெற்றி பெறும் வீர வீராங்கனைகளுக்கு இம்முறை அதிகளவான வெகுமதிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி தேசிய சாதனை நிலைநாட்டும் வீரருக்கு ரூபா ஒரு இலட்சம் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. அத்தோடு ஒவ்வொரு போட்டிச் சாதனைக்கும் 50 ஆயிரம் ரூபா வீதம் பணப்பரிசு வழங்கவும் திட்டம் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
45ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பதுளை வின்ஸ்டன் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ் வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்தோடு போட்டித் தொடரின் இறுதி நாளான 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் முதுகல, இம்முறை நடைபெற வுள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பெறுமதிமிக்க வெகுமதிகளை வழங்க நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதன்படி ஒரு போட்டியில் தங்கப்பதக்கம் பெறும் வீரருக்கு 15ஆயிரம் ரூபாவும், வெள்ளிப் பதக்கத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும், வெண்கலப் பதக்கத்துக்கு 6 ஆயிரம் ரூபாவும் பணப் பரிசு வழங்கப்படவுள்ளது என்றார்.
இந்தப் போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியாக 2100 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM