(எம்.மனோ­சித்ரா)

யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்டு வந்­தது ராஜ­ப­க்ஷாக்கள் அல்ல என்ற உண்­மையை இறுதி நேரத்­தி­லா­வது கோத்­த­பாய ராஜ­பக்ஷ நாட்டு மக்களுக்கு வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்கு நன்றி தெரி­வித்துக் கொள்கின்றோம்.

செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை போன்று இன்னும் ஓரிரு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்கள் இடம்­பெற்றால் மிக இல­கு­வாக அதி­கூ­டிய வாக்கு வித்­தி­யா­சத்தில் சஜித் பிரே­ம­தாச வெற்றி பெறு­வ­தற்கு வாய்ப்­பாக அமையும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கோத்­த­பாய ராஜ­பக்ஷ செவ்­வாய்க்­கி­ழமை நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை போன்று இன்னும் ஓரிரு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்­களை நடத்­தினால் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச அதி­கூ­டிய வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்றி பெறு­வ­தற்கு மிக இல­கு­வாக இருக்கும்.

இதன் போது நூற்­றுக்கு எண்­பது வீத­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் நடை­மு­றைக்கு தேவை­யான பல கேள்­வி­களை மஹிந்த ராஜ­ப­கஷ­வி­டமும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வி­டமும் கேட்­டமை பாராட்­டக்­கூ­டிய விடயம். காரணம் ராஜ­பக்ஷ ஆட்சி காலத்தில் இவ்­வாறு கேள்வி கேட்­ப­தற்­கான சந்­த­ர்ப்பம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஒரு­போதும் வழங்­கப்­ப­ட­வில்லை.

 இவ்­வாறு ஊட­க­வி­ய­லா­ளர்­களால் தொடர்ச்­சி­யாக கேள்­விகள் எழுப்­பப்­பட்ட போது பல சந்­தர்ப்­பங்­களில் மஹிந்த ராஜ­பக் ஷ பதி­ல­ளித்து கோத்­த­ப­ாயவை காப்­பாற்­றிய போதிலும் இறுதி கட்­டத்தில் அவ­ராலும் நிலை­மையை சமா­ளிக்க முடி­யாமல் போனதால் போதும் என்று கூறி­விட்டார். அன்­றைய தினம் மஹிந்த ராஜ­பக் ஷ அங்கு இருந்­தி­ரா­விட்டால் கோத்த­பா­யவால் எந்த கேள்­விக்கும் பதி­ல­ளித்­தி­ருக்க முடி­யாது.

இதன் போது   கல்­விக்கு கூடிய நிதியை ஒதுக்­கு­வ­தாக கோத்த­பாய கூறிய போது, அந்த நிதியை எங்­கி­ருந்து பெறு­வீ­ர்கள் என்று கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது. இந்த கேள்­விக்கு என்ன பதி­ல­ளிப்­பது என்று புரி­யாமல் கோத்தபாய, மஹிந்­தவின் முகத்தைப் பார்க்­கின்றார்.'2005 இல் யுத்­தத்தை நிறைவு செய்ய எவ்­வாறு நிதி பெறு­வீர்கள் என்று அப்­போது என்­னிடம் கேள்வி எழுப்­பப்பட்­டது. எனினும் அதனை நான் செய்து காட்­டினேன். 

அதே போன்று இதையும் செய்து காட்­டுவேன்' என்று அந்த கேள்­விக்கு மஹிந்த பதி­ல­ளிக்­கின்றார். பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மித்­தி­ருக்­கின்ற தரப்­பி­லுள்­ள­வர்கள் இப்­ப­டியா பொறுப்­பற்ற வகையில் பதில் கூறு­வார்கள்? இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இருவர் பயந்து அமர்ந்­தி­ருந்­ததைப் போன்றே தோன்­றி­யது.

இதே போன்று காணாமல் போன இரா­ணு­வத்­தினர் பற்­றியும் காணாமல் போன சாதா­ரண மக்கள் பற்­றியும் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கும் நழுவும் வகை­யி­லேயே பதி­ல­ளித்தார். அவர்­க­ளது ஆட்சி காலத்தில் ஏதேனும் தவறு ஏற்­பட்­டி­ருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு தவறை திருத்திக் கொள்­வ­தாக அல்­லது தீர்வு வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்க வேண்டும். நல்­ல­வற்றை மாத்­திரம் தாம் செய்­த­தாக கூறிக்­கொண்டு, ஏனைய விட­யங்­களை மற்­ற­வர்கள் பக்கம் திருப்­பி­வி­டு­வதை சிறந்­த­வொரு தலைவர் செய்ய மாட்டார்.

 யுத்­தத்­திற்கு தான் தலைமை வகிக்­க­வில்லை என்று கோத்தபாய கூறிய பின்னர் விமல் வீர­வன்­ச­வி­னு­டைய முகம் மாறி­விட்­டது. இத்­தனை காலமும் ராஜ­பக் ஷ குடும்பம் தான் யுத்­தத்தை நிறைவு செய்­தது என்று தேர்தல் பிர­சார மேடை­களில் கூறிக்­கொண்­டி­ருந்­தார்கள். இனி எவ்­வாறு அதைக் கூறு­வது என்று அவ­ருக்கு குழப்பம் ஏற்­பட்டு விட்­டது. எவ்­வா­றி­ருப்­பினும் கடைசி நேரத்­தி­லா­வது நாட்டு மக்­க­ளுக்கு உண்­மையைக் கூறி­ய­தற்கு கோத்த­பா­ய­வுக்கு நன்றி தெரி­வித்து கொள்­கின்றோம்.

பழைய குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த நிலைப்­பாடு குறித்து ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்­பினார். அந்த கேள்­விக்கு  'நான் எதிர்­கால ஜனா­தி­பதி. அதனால் என்­னிடம் பழை­ய­வற்றை கேட்­கா­தீர்கள்' என்று பதி­ல­ளிக்­கின்றார். அவ்­வாறு பழ­மையை மறந்து வாழ முடி­யுமா என்று மீண்டும் கேள்­வி­யெ­ழுப்­பிய போது 'ஆம்' என்று கூறு­கின்றார். அது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும். முன்னர் நடந்த கொலை சம்­ப­வங்கள், ஊழல் மோச­டிகள் அவை தொடர்­பான வழக்­குகள் என்ற அனைத்­தையும் மறந்து அவரை ஒரு புது மனி­த­ராக அனை­வரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோத்தபாய எதிர்­பார்க்­கின்றார். தவறு செய்­தி­ருந்தால் முது­கெ­ழும்­புடன் அதனை ஏற்றுக் கொள்­வ­தோடு, மீண்டும் அந்த தவறு இடம்­பெ­றாமல் தடுக்­கின்றேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

கோத்தபாய ராஜபக்ஷ எம்முடன் வாத விவாதத்தில் ஈடுபடத் தேவையில்லை. அடுத்த ஐந்து வருடத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களைக் கூறுவார்.  அதே போன்று கோத்தபாயவும் அவர் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் கோத்தபாயவுக்கு பகிரங்கமாக விவாதிக்க முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்றார்.