(நா.தினுஷா) 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து  இதுவரையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்துக்கு (கெபே) 179 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் அகீம் தெரிவித்தார். 

கெபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்புடயவை. அதேபோன்று  தேர்தல்  நடவடிக்கைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதையளவில் நீண்ட கால கண்காணிப்பாளர்களும் மாவட்ட அமைப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அதன் அடிப்படையில் தேர்தல் தினத்தன்று 7500 தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கெபே அமைப்பக்கு கீழ் இயங்கும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவேறு அமைப்பகளின் உதவியுடனேயே இந்ம முறை தேர்தல் காண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். 

மேலும் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில்  எங்களுக்கு எவ்விதமான தேர்தல் வன்முறைகள் தொடர்பதான முறைபாடுகளும் பதிவாக வில்லை. இது விசேட அம்சமாகும். இந்த நிலை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.