மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு  

Published By: Vishnu

17 Oct, 2019 | 09:49 PM
image

(ஆர்.விதுஷா)

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும்  இலங்கையர் நாடு திரும்புவதற்கா டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மலேசிய அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக  அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.  

தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்று அந்நாட்டின் குடிவரவு  குடியகல்வு சட்டதிட்டங்களை மீறியவர்களை அவர்களது தாய்  நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காகவே இந்த கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   தெரிவித்துள்ளது.   

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31  ஆம் திகதி வரையான 5 மாத கால அவகாசமே இவ்வாறு  வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் வீசா இன்றி  சட்டவிரோதமான முறையிலும், மலேசிய  விதிமுறைகள் சட்டதிட்டங்களை மீறியும் அங்கு  தங்கியிருப்பவர்களுக்கு எதிராகவே இந்த  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.  

அவ்வாறு சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களுக்கு  கடிதம் மூல அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்பதுடன்  , அவர்களிடமிருந்து நிர்வாக கட்டணமாக சுமார் 30 ஆயிரம்  ரூபாய் (700 ரிங்கிட்)  கட்டணமும் அறவிடப்படவுள்ளது.   

அதேவேளை அவர்கள் நாடு  திரும்புவதற்கான கடவுச்சீட்டு மற்றும்   அவசர வீசா என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளது.  

இலங்கை பிரஜைகள்  இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருப்பார்களாயின் மலேசிய  அரசாங்கம்  வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலத்தை தகுந்த முறையில் உபயோகித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் 00603-20341705  மற்றும் 00603-20341706 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக    தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33