(ஆர்.விதுஷா)

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் 20 அம்ச  கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் நாளை கையளிக்கவுள்ளது. 

பாரம்பரிய நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக செயற்படும்  சக்திகளுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள  வேட்பாளர்கள் எத்தகைய நடவடிக்கையை எடுப்பார்கள் என்பது  தொடர்பாக 20 அம்ச கோரிக்கையொன்றை அவர்களிடம்   முன்வைக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்  சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  

இந் நிலையில் நாளை பொதுஜன பெரமுனவினரை சந்திக்கவுள்ளதுடன் கோரிக்கைகளையும் கையளிக்கவுள்ளனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள்  சங்கத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித  அளுத்கே தெரிவித்தார்.