இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத்தர வேண்டும்

Published By: Vishnu

17 Oct, 2019 | 07:14 PM
image

(எம்.நியூட்டன், ஆர். யசி)

யாழப்பாணத்தில் சர்வதேச விமானநிலையத்தை அமைத்து உலகத்தரத்துடன் இணைத்தது போன்று நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத் தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனாதிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டியில் 70 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை குறிப்பாக அரசியல் தீர்வுகள் ஏற்படவில்லை இப்போது தேர்தல் காலம் என்பதால் அதைப் பற்றி பேச விருப்பவில்லை எவ்வளவு விரைவாக எவ்வளவு ஆற்றல் திறனுடன் இந்த நாட்டின் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவின் பணிப்பில் இயங்கும் செயலாளர்கள் ஊழியர்கள் பணிப்பாளர்கள் திறம்பட விரைவா இயங்கி இந்த விமாநிலையத்தை உலகத்துடன் இணைக்க சேவையாற்றியது போல இந்த மக்களின் துன்ப துயரங்களையும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் ஒரு அரசியல் தீர்வைத் அடைவதற்கு எல்லோரும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பல்வேறு அபிவிருத்திகள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மயிலிட்டித் துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளபோதும் அப்பகுதி மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. பலாலி விமானத்தளத்திற்கு கிழக்கு புறமாக இருக்கும் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இரண்டாயிரம் குடும்பங்கள் இப்போதும் அகதிகளாக நிலமற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17