தரம் 5 மாணவர்களுக்கு ரூ. 20 மில். பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கும் மக்கள் வங்கி

Published By: Raam

23 May, 2016 | 09:17 AM
image

மக்கள் வங்­கி­யா­னது தரம் - 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் திற­மையை வெளிப்­ப­டுத்தும் மாண­வர்­க­ளுக்கும், சிசு­உ­தான கணக்கு வைப்பா­ளர்­க­ளுக்கும், 20 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான புல­மைப்­ப­ரி­சில்­களை வழங்­க­வுள்­ளது.

தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் உயர் இடங்­களை பெறும் மாண­வர்­க­ளுக்கு உதவும் வகையில், குறித்த மாணவர்கள் தமது இரண்டாம் நிலை கல்­வியைத் தொடர்­வ­தற்கு விசேட புல­மைப்­ப­ரி­சில்­க­ளையும், பரி­சு­க ளையும் மக்கள் வங்கி வழங்கும்.அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்­களைப் பெறும் மாண­வர்­க­ளுக்கு முறையே ரூ. 150,000, ரூ 125,000 மற்றும் ரூ. 100,000 என்­ப­னவும், மாவட்ட மட்­டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்­களைப் பெறும் மாண­வர்­க­ளுக்கு முறையே ரூ. 25,000, ரூ. 20,000 மற்றும் ரூ. 15,000 பணப்­ப­ரிசு வழங்­கப்­படும்.

மேலும், மாவட்ட அடிப்­ப­டையி­லான செயற்­பாட்­டிற்கு அமைய, ரூ. 5,000 பெறு­ம­தி­யான புல­மைப்­ப­ரி­சில்கள் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் வெட்­டுப்­புள்­ளிக்கு அதி­க­மாக புள்­ளி­களைப் பெறும் 2,000 சிசு­உ­தான கணக்கு வைத்­தி­ருப்­போ­ருக்கு வழங்­கப்­படும். மாவட்­டத்தில் முத­லிடம் பெறும் மாண­வர்களை இணைத்துக் கொள்ளும் பாட­சா­லை­க­ளுக்கும் நிதி ரீதி­யாக இந்த சிசு­உ­தான நிகழ்ச்சி பங்­க­ளிக்கும்.

2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திக­தி­யன்று, ஆகக் குறைந்­தது ரூ. 5,000 கணக்கு மீதி­யுடன், புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் வெற்றி பெறும் (மாவட்ட மட்ட வெட்­டுப்­புள்­ளியின் அடிப்ப­டையில்) சிசு உதான கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்கள், இந்த புல­மைப்­ப­ரி­சி­லுக்கு தகு­தி­யா­ன­வர்கள். பெறு­பே­றுகள் வெளிவந்ததும், தமது சிசு உதான கணக்கு வைத்திருக்கும் மக்கள் வங்கி கிளைக்குச் சென்று, சம்பந்தப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right