வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வோருக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

Published By: Vishnu

17 Oct, 2019 | 06:31 PM
image

(செ.தேன்மொழி)

இயந்திர கோளாறுகள் காரணமாக வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்கள் தொடர்பில் அடையாளம் உறுதிபடுத்தப்படாது விட்டால் அவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் படைப்பிரிவினரை கொண்டு சோதனைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

கடந்த காலங்களில் அடையாளம் உறுதிப்படுத்தபடாமல் வீதியோரங்களில் நிறுத்தி செல்லும் வாகனங்களினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

இந்த நிலைமையை கட்டுபடுத்துவதற்காக, இவ்வாறு வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் அவர்களின் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்போது இயந்திர கோளாறுகள் காரணமாக வாகானத்தை நிறுத்தி செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டால். அந்த வாகனத்தினதும் , பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் வாகனத்தின் அருகில் ஒருவர் இருக்கலாம். அல்லது இவ்வாறு இருக்கமுடியாத சந்தரப்பத்தில் 119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கும் வாகனத்தின் இலக்கத்தையும் , இடத்தையும் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும். 

அதேவேளை இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகத்தின் பின் புறத்தில் அல்லது முன்புறத்தில் சாரதியின் தொலைப்பேசி இலக்கத்தை காட்சிபடுத்திருத்தல் வேண்டும். அவ்வாறு அடையாளம் உறுதி படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள்  குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27