நாம் தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை வழங்க முற்­ப­டும்­போது அது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளி­டத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு அர­சி யல் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்றால் அது மஹிந்த ராஜ­பக் ஷ மூலம் மாத்­தி­ரமே கிடைக்கும். அப்­போது தான் பெரும்­பான்மை மக்­களும் அதனை ஏற்­றுக்­கொள்­வார்கள் என பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரிவு செய்­யப்­பட்டால் கட்­டாயம் தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வ­டை யச் செய்­வ­தோடு அவர்­களின் அனைத்து பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைப்பார் எனவும் குறிப்­பிட்டார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி ­யி­டு­கின்றார்.

இந்­நி­லையில் இது தொடர்பில் பொது­ ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

அச் செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, 

கேள்வி: பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­ பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றங்­கு­கிறார். அந்­த­வ­கையில், பொது­ ஜன பெர­மு­னவின் சார்பில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்­டங்கள் எவ்­வா­று­அ­மைந்­துள்­ளன?

பதில்: பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­ பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யானால் தமிழ் மக்­க­ளுக்கு பல்­லேறு வேலைத்­திட்­டங்­களை அமுல்­ப­டுத்­த­வுள்ளார். கடந்த தேர்­தலில் தமிழ் மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே வாக்­க­ளித்­தனர். இத­ன­டிப்­ப­டையில் அவர்கள் தமி­ழர்­க­ளுக்கு அனைத்து தீர்­வு­க­ளையும் வழங்­குவோம் என்று ஆட்­சிக்கு வந்­தனர். இந்­நி­லையில் அவர்­களால் தமி­ழர்­க­ளுக்கு எவ்­வித தீர்­வு­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. 

வடக்கு மக்­களின் முக்­கிய பிரச்­சி­னை அர­சியல் தீர்வாகும். அதைப்­பெ­று­வ­தற்கு தான் தமி­ழர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளித்­தனர்.  

அதே­வேளை, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கும் பிரச்­சி­னை­யுள்­ளது, மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு வீட்டுப் பிரச்­சினை மற்றும் சம்­பளப் பிரச்­சி­னை­யுள்­ளது. கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்தால் தீர்க்க வேண்­டிய முத­லா­வது பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது பொரு­ளா­தாரப் பிரச்­சினை. ஒரு­வேளை உண­வுக்கு பெரும் சிர­மத்தை நோக்­கு­கின்ற மக்கள் உள்­ளனர். அந்­த­வ­கையில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்தால் தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வ­டையச் செய்து பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­ார்.

அதன் பின்னர் தமிழர் பிர­தே­சங்­களில் பல அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்கப்படும். குறிப்­பாக கிளி­நொச்சி பிர­தே­சத்தை எடுத்­துக்­கொண்டால். பிர­தான வீதிகள் அனைத்தும் காப்பட் செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் மக்கள் வசிக்கும் கிரா­மங்­களில் உள்ள வீதிகள் அனைத்தும் புன­ர­மைக்­கப்­ப­டா­ம­லுள்­ளன. அத்­தோடு குடி­நீர்ப்­பி­ரச்­சினை இவ்­வாறு பல அடிப்­படைப் பிரச்­சி­னைகள் உள்­ளன. 

அந்­த­வ­கையில் தமிழ் மக்­களின் பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை முதலில் வலுப்­ப­டுத்­திக்­கொண்டு அவர்­களின் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்­ததன் பிற்­பாடே அர­சியல் தீர்வுத் திட்­டங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை மேற்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வுத்­திட்­டங்­களை வழங்க வேண்டும்.

தற்­போது 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அதில் பொலிஸ் அதி­கா­ரமும் காணி அதி­கா­ரமும் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அது குறி த்து நாம் பேசி எவ்­வாறு 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆரா­ய­மு­டியும்.

நாம் இது­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச­வில்லை. இருப்­பினும் அவர்கள் கேட்­பதை தற்­போது எம்மால் போலிக்­காக செய்­ய­மு­டி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேசி நாம் சமஷ்டி முறையில் தீர்­வுத்­திட்­டங்­களை வழங்க முன்­வந்தால் அது பெரும்­பான்மை மக்­க­ளி­டத்தில் குழப்­பத்தை உரு­வாக்­கலாம். 

இதே­வேளை, நாம் தமிழ் மக்­க­ளுக்கு தீர்­வுத்­திட்­டத்தை வழங்க முற்­ப­டும்­போது அது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளி­டத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாத விதத்தில் வழங்க வேண்டும். இதே­வேளை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்றால் அது மஹிந்த ராஜ­பக் ஷ மூலமே கிடைக்கும். அப்­போது தான் பெரும்­பான்மை மக்­களும் அதனை ஏற்­றுக்­கொள்­வார்கள். அத்­துடன் மஹிந்த ராஜ­பக் ஷவும் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வு­க­ளுக்­காக 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்­து­ரை­யாட முடி ­யு­மென தெரி­வித்­துள்­ளனர். அது சிறந்­த­ தொரு விட­ய­மாகும் என நினைக்­கின் றேன்.

கேள்வி: கோத்­த­பாய ராஜ­பக் ஷ மீது பல கருத்­துக்­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­த­வ­கையில் தமிழ் மக்கள் அவர் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைப்­பது?

பதில்: கோத்­த­பாய ராஜ­பக் ஷவை மிக வும் பயங்­க­ர­மா­ன­வ­ரா­கத்தான் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் சித்­த­ரிக்­கின்­றனர். கடந்த காலங்­களில் வெள்ளை வேனில் ஆட்­களை கடத்­து­வ­தாக தெரி­வித்­தனர். இந்­நி­லையில் கடந்த காலங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையோ அல்­லது வேறு எவ­ரா­வதோ வெள்ளை வேனில் கடத்­தப்­பட்­டுள்­ளார்­க­ளா­வென நாம் 2015ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் கோள்­யொன்றை எழுப்­பி­யி­ருந்தோம். 

அவ்­வாறு எதுவும் இடம்­பெ­ற­வில்­லை­யென பாது­காப்பு அமைச்சு இதற்கு பதி­ல­ளித்­துள்­ளது. இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் தெரி­விப்­பது முற்­றிலும் பொய்­யா­னது. லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி செய்­திகள் வெளி­யா­கின. அது தொடர்பில் எங்­குமே வழக்­குத்­தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதெல்லாம் பொய்­யா­னதே. 

கோத்­த­பாய ராஜ­பக் ஷ இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­பவர் அல்ல. யுத்­த­கா­லத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாது­காப்பு செய­லா­ள­ராக செயற்­பட்டார். தற்­போது யுத்தம் நிறை­வுக்கு வந்­துள்ள நிலையில் அவர் ஜன­நா­யக நீரோட்­டத்தில் இணைந்­துள்ளார். இந்­நி­லை­யி­லேயே வடக்கில் மாகாண சபை தேர்தல், பிர­தேச சபைத் தேர்தல் இடம்­பெற்­றன. கோத்­த­பாய ராஜ­பக் ஷ இராணுவ வீரர் என்றால் ஏன் அவர் தேர்­தல்­களை நடத்த உத­வ­வேண்டும். இல்­லா­விட்டால் அவரால் இரா­ணு­வத்­தி­னரை வைத்து வடக்கை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும் அல்­லவா? யுத்­தத்தை நிறை­வுக்குக் கொண்­டு­வந்­த­துடன் உட­ன­டி­யா­கவே ஜன­நா­ய­கத்தை கொண்டு வந்தோம். அது மட்­டு­மல்ல கோத்­த­பாய ராஜ­பக் ஷ தமிழ் மக்­க­ளுக்கு மட்­டுல்­லாது முழு நாட்­டுக்­குமே பல்­வேறு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

கிளி­நொச்­சியின் அபி­வி­ருத்தி எவ்­வாறு இடம்­பெற்­றது. இரா­ணு­வத்­தி­னரை ஈடு­ப­டுத்­தியே கிளி­நொச்சி நகரம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டது. அதற்கு கோத்­த­பாய ராஜ­பக் ஷவே தலைமை வகித்து அந்த அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்தார்.  அது மட்­டு­மல்ல கொழும்பை இவ்­வ­ளவு அழ­ கான முறையில் அபி­வி­ருத்தி செய்­தது கோத்­த­பாய ராஜ­பக் ஷவே. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மீது ஏனையோர் வீண்­ப­ழி­களை சுமத்­து­கின்­றனர்.

கோத்­த­பாய ராஜ­பக் ஷ சொன்னால் செய்வார். செய்­வ­தையே சொல்­லுவார். அவர் தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யா­னதை வழங்கும் போது சொல்­லுவார். ஏனைய அர­சி­யல்­வா­திகள் பல தீர்­வுப்­பொ­தி­களை வழங்­கு­வ­தாக சொல்­லு­வார்கள் ஆனால் அவற்றை செய்­ய­மாட்­டார்கள். 

யார் என்ன சொன்­னாலும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார். ஏனென்றால் கடந்த பிர ­தேச சபை தேர்­த­லில் ­பொ­து­ஜன பெர­முன வெற்­றி­பெற்­றுள்­ளது. அத்­துடன் பொது­ஜ­ன­ பெ­ர­மு­ன­வுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தற்­போது ஆத­ரவு வழங்கும் நிலை யில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெ­று­வது மேலும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

சஜித் பிரே­ம­தா­சவுக்கு வெறும் 37 இலட்சம் வாக்­கு­க­ளையே அவரால் பெற முடியும். கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் வெற்­றிக்கு தமிழ் மக்­களும் பங்­கு­தா­ரர்களாக மாற வேண்டும்.  தமிழ் மக்கள் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கா­ம­லேயே அவர் பல்­வேறு அதி­வி­ருத்­தி­களை தமிழ் மக்­க­ளுக்கு நிறை­வேற்­றி­யுள்ளார். அதே­போன்று பெருந்­தோட்ட மக்­க­ளுக்கும் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை நிறை­வேற்­றிக்­கொ­டுத்­துள்ளார். அதே­போன்று யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா, மட்­டக்­க­ளப்பு ஆகிய பிர­தே­சங்­களில் பல்­வேறு அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்தால் தமிழர் பிர­தேசம் மேலும் அபி­வி­ருத்­தி­ய­டையும். இம்­முறை தமி­ழர்கள் அனை­வரும் ஒரு­முறை கோத்­த­பாய ராஜ­பக் ஷஷவில் நம்­பிக்கை வைத்து ஆத­ரவு வழங்­குங்கள். 

கேள்வி: - நாட­ளா­விய ரீதியில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்கைகள் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில், பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணை­யொன்று நிலு­வையில் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் அவர் யாழ்ப்­பாணம் செல்­வாரா?

பதில்: - யாழ்ப்­பாணத்தில் அவ­ருக்கு எந்­த­வி­த­மான வழக்­கு­களும் இல்லை. கோத்­த­பாய ராஜ­பக் ஷ வடக்கு, வன்னி உட்­பட அனைத்து தமிழர் பிர­தே­சங்­க­ளுக்கும் சென்று மக்­க­ளிடம் நேர­டி­யாக சென்று பிர­சா­ரங்­களை மேற்­கொள்வார். 

அனு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற கூட்­டத் தில், கோத்­த­பாய ராஜ­பக் ஷ சிறிய குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­லுள்ள இரா­ணுவ வீரர்களை தான் ஜனா­தி­ப­தி­யாக வந்த மறுநாள் விடு­தலை செய்­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார். அவ்­வாறே தமி­ழர்­க ளும் சிறு­குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு சிறை­வைக்­கப்­பட்­டிருந்தால் அவர்­க­ளையும் அவர் விடு­தலை செய்வார்.

கேள்வி: காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­ பக் ஷ தெரி­வா­னதும் காணா­மல்­போனோர் பிரச்­சினை தொடர்­பாக மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்து சிறப்பு ஆணைக்­கு­ழு­வொன்று அமைத்து சிறந்­த­தொரு தீர்வை வழங்­கு­வார்.

கேள்வி: மலை­ய­கத்தில் பல அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர். அந்­த­வ­கையில் நீங்­களும் பொது­ஜன பெர­முன சார்பில் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­யென்ற ரீதியில் அந்த மக்­க­ளுக்கு எவ்­வா­றான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கப்­போ­கின்­ றீர்கள்?

பதில்: மலை­யக மக்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. பல மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்­களும் உள்­ளனர். எவ்­வ­ளவு அமைச்­சர்கள் இருந்தும் மலை­ய­கத்தில் வீட்டுப் பிரச்­சி­னை­யென்­பது தீர்ந்­த­பா­டில்லை. தற்­போதும் மக்கள் 10அடி அகலம் 10அடி  நீளம் கொண்ட லயன் அறை­களில் தான் வசிக்­கின்­றனர். அத்­தோடு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சினை பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இதை­விட கல்விப் பிரச்­சி­னையும் அங்கு உள்­ளது. தோட்­டப்­புற இளைஞர், யுவ­தி­க­ளுக்கு அர­சாங்க தொழிலில் ஈடு­பட முடி­யாத நிலை­யுள்­ளது. அவர்கள் கடை­க­ளிலும் வேறு தொழில்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதனை நாம் மாற்ற வேண் டும். அவர்­களும் அரச வேலை வாய்ப்­புக்­களை பெற்றுக்கொள்ள வழிவகையேற் படுத்திக்கொடுக்கவேண்டும். அதற்கு முதலில் கல்விப்பிரச்சினையை நாம் சீர்செய்துகொடுக்க எண்ணியுள்ளோம். உதாரணமாக பரீட்சை பெறுபேறுகளை பார்த்தால் வேறுபிரதேசங்களை விட மலையக பிரதேச மாணவர்களின் பெறு பேறுகள் குறைவாகவுள்ளன. அதற்கு நாம் ஒரு தீர்வு வழங்க வேண்டும். கடந்த முறை தோட்ட மக்கள் அனைவ ரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்தனர். ஏனெனில்  ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு செய்வதாக வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற் போது வாக்குறுதி வழங்கப்பட்டு நான் கரை வருடங்கள் கடந்துள்ளபோதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. இதே வேளை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாதங் கள் கடந்த நிலையில் அது வழங்கப் படவில்லை. ஆனால் அரசாங்க ஊழியர்க ளுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜ­பக் ஷ காலத்தில் மலைய கத்தில் பல்வேறு அபிவிருத்திகள், நியம னங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவை தற்போது இடம்பெறவில்லை. கோத்தபாய ராஜ­பக் ஷ ஜனாதிபதியாக தெரிவானதும் மலையக மக்களுக்கு என்று விசேட திட்டமொன்றை கொண்டு வரவுள்ளார். அத்துடன் தோட்ட மக்களுக்கான வீட மைப்பு திட்டத்திற்கு புதியதொரு திட்டமொன்றை கொண்டுவருவார். அத்துடன் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவார்.

நேர்காணல் - வீ.பிரியதர்சன்